Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கரும்பு டன்னுக்கு ரூ.710 ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்

கரும்பு டன்னுக்கு ரூ.710 ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்

2025-26-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.709.50 வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் 2025-26-ம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, டன்னுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 85,000 விவசாயிகள் பயனடைவர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஊக்கத்தொகை பெறுவதற்கான ஆணைகளை 3 விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் வழங்கினார். இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. கரும்பு விவசாயிகளின் வருவாயை அதிகரித்து, சாகுபடியை ஊக்குவிக்க இந்த ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 10-ல் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 2025-26-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.709.50 வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக அரசுக்கு ரூ.603.33 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத், தலைமைச் செயலர் மு.சாய்குமார், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் துறைச் செயலர் நா.வெங்கடேஷ், சர்க்கரை ஆணையர் இரா.கண்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி
6% உயர்வுடன் அறிமுகமான நகை பங்கு
அடுத்த செய்தி
பிஇஎல் பங்கு 42% உயர வாய்ப்பு - மோதிலால் ஓஸ்வால் கணிப்பு

தொடர்புடைய செய்திகள்